Home One Line P1 தேர்தல் மூலம் மொகிதின் மக்கள் ஆணையைப் பெற வேண்டும்

தேர்தல் மூலம் மொகிதின் மக்கள் ஆணையைப் பெற வேண்டும்

562
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசு 15- வது பொதுத் தேர்தல் மூலம் மக்களிடமிருந்து புதிய ஆணையைப் பெற வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார்.

கொவிட் -19 பாதிப்பு முடிந்தவுடன் 15-வது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற மொகிதினின் விருப்பத்தை அவர் ஆதரித்தார். இது துல்லியமானது என்றும் அவர் விவரித்தார்.

“தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கத்தின் குறுகிய பெரும்பான்மை பெரும்பாலும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே, மக்களிடமிருந்து புதிய ஆணை முக்கியமானது. அரசாங்கம் ஒரு வலுவான ஆணையைக் கொண்ட அரசாங்கமாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். குறுகிய பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் நல்லதைக் கொண்டுவராது என்பதை மக்கள் அறிவார்கள். எனவே பிரதமர் வெளிப்படுத்திய நோக்கம் ஒரு நல்ல விஷயம், ” என்று அவர் பெரிதா ஹாரியானில் கூறியுள்ளார்.