கோலாலம்பூர்: மக்களவையில் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 30) நிதி அமைச்சகத்திற்கான குழு அளவிலான விவாதத்தில், இயக்க செலவினங்களுக்காக 20.8 பில்லியன் ரிங்கிட் மற்றும் வளர்ச்சி செலவினங்களுக்காக 14.1 பில்லியன் ரிங்கிட் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் விதிகளின் அடிப்படையில், 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அளவிலான தீர்மானத்தை ஆதரித்த வேளையில், 95 பேர் எதிர்த்தனர். 18 பேர் மக்களவையில் இல்லை என்று துணை சபாநாயகர் ராஷிட் ஹஸ்னான் தெரிவித்தார்.
15- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வாக்கெடுப்பைக் கோரிய நிலையில், இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நவம்பர் 6- ஆம் தேதி வரவு செலவு திட்டத்தில், நிதி அமைச்சகத்திற்கு 35.1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
நாளை, மேலும் மூன்று அமைச்சகங்கள் குழு அளவிலான விவாதத்தில் ஈடுபடும். வெளியுறவு அமைச்சகம், தேசிய ஒற்றுமை அமைச்சகம் மற்றும் தோட்டதொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சகம் இதில் அடங்கும்.