Home One Line P2 அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை, ரஜினி விரைவில் அறிவிப்பார்

அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை, ரஜினி விரைவில் அறிவிப்பார்

712
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று திங்கட்கிழமை அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், அவர் விரைவில் அவரது முடிவை வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். ராகவேந்திரா மண்டபத்தில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

“மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. அவர்களுடைய கருத்துக்களை சொன்னார்கள். நானும் எனது பார்வையை பகிர்ந்துகொண்டேன். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றனர். நானும் எனது முடிவை விரைவில் வெளியிடுவேன்,” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த செய்தி அவரது இசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.