கோலாலம்பூர்: தீக்கான எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து மக்களவை சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அனைத்து நாடாளும்னற உறுப்பினர்களும் நாடாளும்னறத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.
காலை 10.18 மணியளவில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் அகமட் அம்சாட் ஹாஷிம் கேள்வி பதில் அமர்வின் போது கேள்விகளுக்கு பதிலளித்தபோது எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டிடத்தில் அவசர காலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் வெளியே சென்று கூடும் இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இருப்பினும், நாடாளுமன்ற அமர்வு 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது.
மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண் இது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இந்த எச்சரிக்கை மணி ஒலித்ததாகக் கூறினார்.