கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் யோஹேந்திர நடராஜன் தாக்கல் செய்த வழக்கில், அஸ்மின் தங்களுக்கு எதிராக மோசடி செய்ததாக அறிவிக்க வேண்டும் என்று வாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய அரசியலமைப்பின் 59 (1)- வது பிரிவின் கீழ் அஸ்மின் தனது அரசியலமைப்பு உறுதிமொழியை மீறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தால் பொருத்தமாகக் கருதப்படும் சேதங்கள் மற்றும் பிற உத்தரவுகளையும் வாதிகள் நாடுகின்றனர்.
அப்போதைய தேசிய முன்னணி கூட்டணியை வெளியேற்றவும், மலேசியாவை ஊழல் அதிகாரிகளிடமிருந்து விடுவிக்கவும் அஸ்மின் 2018-இல் தேர்தலில் தமது பரப்புரைகளில் கூறியதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
பிப்ரவரியில் அஸ்மின் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், தேசிய கூட்டணி நிர்வாகத்தில் சேர்ந்தார் என்று அவர்கள் கூறினர். அஸ்மின் முன்னதாக தேசிய முன்னணியில் உள்ளவர்கள் ஊழல் நிறைந்தவர்கள், நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்று ஒப்புக் கொண்டதை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.