Home One Line P1 தேசிய ஒற்றுமை அமைச்சுக்கான ஒதுக்கீடுகளும் நிறைவேற்றப்பட்டன

தேசிய ஒற்றுமை அமைச்சுக்கான ஒதுக்கீடுகளும் நிறைவேற்றப்பட்டன

495
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தின் குழு அளவிலான விவாதத்தில் தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சக மசோதாவைப் போலவே, இந்த மசோதாவும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றது. எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு செல்லாமல் இவை நிறைவேற்றப்பட்டன.

துணை சபாநாயகர் அசலினா ஒத்மான் சைட், தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமட் சாதிக் பேசி முடித்ததும் வாக்களிப்பு நடத்த முடிவு செய்தார்.

#TamilSchoolmychoice

ஒற்றுமை அமைச்சகத்திற்குப் பிறகு, இன்று மேலும் ஓர் அமைச்சகம் மட்டுமே உள்ளது. இதுவரை, நான்கு அமைச்சகங்களுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.