புது டில்லி: இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களது இந்த போராட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இதற்கிடயில், இந்த போராட்டத்தில் பங்குக் கொண்டவர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீர் பாய்ச்சி, கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தி காவல் துறையினர் விவசாயிகளைக் கட்டுப்படுத்துவதாக புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.