Home One Line P1 தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன

தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன

501
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குழு அளவிலான விவாதத்தில், இன்று நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.

மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண், கூட்டத்தின் விதிகளின் அடிப்படையில், 108 பேர் ஆதரித்ததாகவும், 95 பேர் எதிர்த்ததாகவும், மேலும், 17 பேர் மக்களவையில் இல்லை என்றும் அறிவித்தார்.

15- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று கோரியதை அடுத்து, எண்ணிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னதாக, தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் துணை அமைச்சர் வில்லி அனாக் மோங்கின் உரை நிறைவேற்றப்பட்டதும், நாடாளுமன்றத்தில் சர்ச்சை எழுந்தது.

புஞ்சாக் போர்னியோ நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ‘துரோகி’ என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

அவர்களில் சிலர், அனாக் மோங்கின் நடு விரலைக் காட்டியதாகக் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக பாஹ்மி பாட்சில் மற்றும் கஸ்தூரி பட்டு ஆகியோர் சமூக ஊடகங்களில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.