Home One Line P1 பெர்சாத்து கட்சியை மூடிவிடலாம், அம்னோவில் இணையும் நேரம் வந்துவிட்டது

பெர்சாத்து கட்சியை மூடிவிடலாம், அம்னோவில் இணையும் நேரம் வந்துவிட்டது

604
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினும், பெர்சாத்து கட்சியும் அம்னோவுடன் திரும்பும் நேரம் வந்துவிட்டது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அஸ்ராப் வாஜ்டி டுசுகி கூறினார்.

பெரும்பாலான பெர்சாத்து தலைவர்கள் அம்னோவிலிருந்து உதித்தவர்கள்.

#TamilSchoolmychoice

“உண்மையில், கொள்கை, நோக்குநிலை மற்றும் சித்தாந்தம் ஆகியவற்றில் அம்னோவும், பெர்சாத்துவும் ஒரே மாதிரியானவை. அம்னோவிலிருந்து வேறுபட்டவை அல்ல. அம்னோவிலிருந்து பிரிந்த சில பிளவுபட்ட கட்சி மலாய்க்காரர்களின் மிகப்பெரிய கட்சிக்குத் திரும்பியது என்பதை வரலாறு நிரூபிக்கிறது. மலாயா சுதந்திரம் கட்சி (ஐஎம்பி), தேசியக் கட்சி, பார்ட்டி மெலாயு செமாங்காட் 46 மற்றும் அம்னோவை இழிவுபடுத்துவதே அதன் ஒரே நோக்கமாக கொண்டிருக்கும் பெர்சாத்து கட்சி, “என்று அவர் ஓர் கட்டுரையில் கூறினார்.

அஸ்ராப் பெர்சாத்து தலைவர்களை அம்னோவுக்குத் திரும்ப அழைப்பது இது முதல் தடவையல்ல.

2019 ஜனவரி 23 அன்று, நம்பிக்கை கூட்டணியுடன் பெர்சாத்து அரசாங்கமாக ஆனபோது, ​​அம்னோ இளைஞர் தலைவர் ஒரு முறை இதே கோரிக்கையை முன்வைத்தார்.

அந்த நேரத்தில், 14-வது பொதுத் தேர்தலில் அம்னோவை வீழ்த்துவது மட்டுமே பெர்சாத்துவின் இலக்காக இருந்தது. அது நடந்துவிட்டதாகவும், கட்சித் தலைமை அம்னோவுக்குத் திரும்புவது பொருத்தமானது என்றும் அசிராப் கூறினார்.

“எனவே, அவர்கள் (பெர்சாத்து) கட்சியை மூடிவிடலாம். இலக்கை அடைந்து விட்டார்கள். அம்னோவில் சேரலாம்” என்று அவர் கூறினார்.