கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று தலைமை தாங்கினார். இந்த சந்திப்புக் கூட்டத்தில் 15- வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சந்திப்புக் கூட்டம், தேசிய கூட்டணியை மேலும் வலுப்பெறச் செய்யவும், கூட்டணிக் கட்சிகளுக்கிடையில் ஆரோக்கியமாக ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் வித்திட்டதாக அவர் கூறினார். மக்கள் நலனுக்காக பல திட்டங்கள் ஏற்பாடு செய்யவும் பேசப்பட்டதாக அவர் கூறினார்.
“தேசிய கூட்டணி உச்சமன்றம் அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்த உறுதியுடன் உள்ளது,” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பெர்சாத்து தலைவராக இருக்கும் மொகிதின், மூன்று கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து நேற்று அப்துல் ஹாடி மற்றும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்தார்.