Home One Line P1 91.1 விழுக்காடு அந்நியத் தொழிலாளர் தங்குமிடங்கள் சட்டத்தைப் பின்பற்றவில்லை

91.1 விழுக்காடு அந்நியத் தொழிலாளர் தங்குமிடங்கள் சட்டத்தைப் பின்பற்றவில்லை

669
0
SHARE
Ad

கோலாலம்பூர் : (பெர்னாமா) – நாட்டில் 14 லட்சம் அல்லது 91.1 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தங்குமிடங்கள், சட்டம் 446 அல்லது 1990-ஆம் ஆண்டு தொழிலாளர் தங்குமிடம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான குறைந்தபட்ச தரநிலைகள் சட்டத்தைப் பின்பற்றத் தவறி இருக்கின்றன.

நாடு தற்போது கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்நோக்கி இருக்கும் வேளையில், இந்தப் புள்ளிவிவரம் அச்சத்தை ஏற்படுத்துவதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வரையில் தங்குமிட அனுமதிக்கான 143,587 அல்லது 16 லட்ச அந்நிய தொழிலாளர்களில் 8.89 விழுக்காட்டினருக்கான விண்ணப்பங்களை அரசாங்கம் பெற்றிருப்பதாகச் சரவணன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நடப்பில் இருக்கும் சட்டங்களுக்கு முதலாளிகள் இணங்குவதை உறுதிபடுத்த தமது தரப்புத் தீவிர அணுகுமுறையை மேற்கொள்ளும் என்றும் அவர் விவரித்தார்.

இதனிடையே, அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவிருக்கும் முதலாளிகள் அடுத்தாண்டு ஜூலை முதலாம் தேதி தொடங்கி தங்குமிட அனுமதியை விண்ணப்பிப்பதே முதல்கட்ட விதிமுறையாக அமலில் இருக்கும் என்று அந்நிய தொழிலாளர்களின் அமைச்சரவை செயற்குழுவின் தலைவருமான தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

”அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு நியமிப்பதற்கு முன்பதாக அவர்கள் மனிதவள அமைச்சிடம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் மனிதவள அமைச்சால் சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்கள் (மனிதவள அமைச்சு) திருப்தியடைந்தால், விண்ணப்பத்திற்கான அனுமதியை அவ்வமைச்சு வழங்கும். அதன் பிறகு, குடிநுழைவுத் துறை அவர்களுக்கு விசாவை வெளியிடும். அல்லது மனிதவள அமைச்சிடமிருந்து அனுமதியைப் பெற்ற பிறகு வெளியுறவு அமைச்சும் விசாவை வெளியிடலாம்,” என டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

முதலாளிகளிடமிருந்து பெறப்படும் தொழிலாளர்களுக்கான தங்குமிட கட்டுமான விண்ணப்பங்களை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு விரைவுபடுத்த நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அந்நிய தொழிலாளர் ஒருங்கிணைப்புச் சிறப்புச் செயற்குழுவின் இரண்டாவது கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக இஸ்மாயில் சப்ரி விளக்கமளித்தார்.

— பெர்னாமா