Home One Line P1 சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் குறித்து எம்சிஎம்சி எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் குறித்து எம்சிஎம்சி எச்சரிக்கை

465
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் அதிகமாகப் பயன்படுத்தபடுவது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) பொது மக்களுக்கு நினைவூட்டி உள்ளது.

இது போன்ற கணக்குகளால் தவறுகள் நடப்பது தெரிய வந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று அதன் வணிக தொடர்பு துறை இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை எளிதாக எடுத்துக் கொள்ள இயலாது என்று அவர் கூறியது.

இம்மாதிரியான போலி கணக்குகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் செய்யலாம் என்று அது கூறியது. இது போன்ற சேவை முகநூல் மற்றும் டுவிட்டரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

நாட்டில் இது போன்ற கணக்குகளால் ஏற்படும் குழப்பங்கள், வெறுப்புணர்வுகளைத் தவிர்க்கலாம் என்று அது தெரிவித்துள்ளது.