Home One Line P1 பெர்சாத்து- பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சுல்தான் நஸ்ரினை சந்திக்க அழைப்பு

பெர்சாத்து- பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சுல்தான் நஸ்ரினை சந்திக்க அழைப்பு

585
0
SHARE
Ad

ஈப்போ: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, பெர்சாத்து மற்றும் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தம்மை சந்திக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

அம்னோவைச் சேர்ந்த மந்திரி பெசார் வேட்பாளருக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேராக் மாநில மேலவை உறுப்பினர் முகமட் அன்வார் சைய்னி கூறுகையில், இப்போது அம்னோ அதிபர் சாஹிட் ஹமிடி சுல்தான் நஸ்ரின் ஷாவை அணுகி மந்திரி பெசார் வேட்பாளரின் பெயரை சமர்ப்பித்தார்.

#TamilSchoolmychoice

“சாஹிட் வழங்கிய சமீபத்திய தகவல்களை சுல்தான் பெற்றார். முன்வைக்கப்பட்ட விடயம் முதலில் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். எனவே, இன்று எப்போது வேண்டுமானாலும் தம்மை சந்திக்க பெர்சாத்து மற்றும் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுல்தான் உத்தரவிட்டார்,” என்று அவர் இன்று காலை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மந்திரி பெசார் பதவிக்கான பதவியேற்பு விழா, மாநில அரசை அமைப்பதற்கு அம்னோவுக்கு எளிய பெரும்பான்மை இருப்பதாக சுல்தான் நஸ்ரின் நம்பிக்கை கொண்ட பின்னரே செயல்படுத்தப்படும் என்ரு அன்வார் கூறினார்.

நம்பிக்கை கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களையும் சுல்தான் சந்திப்பாரா என்று கேட்டதற்கு, இந்த நேரத்தில் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று அன்வார் கூறினார்.