Home உலகம் முஷாராப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன

முஷாராப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன

485
0
SHARE
Ad

musarafபாகிஸ்தான், ஏப்ரல் 16- பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட, முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாராப் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

நாட்டின் வடமேற்கே தொலைதூரத்தில் உள்ள சித்ரால் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு ஏற்று கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது.

முன்னதாக வேறு மூன்று தொகுதிகளில் போட்டியிட அவர் தாக்கல் செய்திருந்த மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஒன்பது ஆண்டு காலம் பாகிஸ்தானின் அதிபராக இருந்த இந்த முன்னாள் இராணுவத் தளபதி, சுயமாக நாடு கடந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மாதம்தான் நாடு திரும்பினார். பதிவியிலிருந்த காலத்தில் தேசத் துரோகம் புரிந்தார் எனும் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மே மாதம் 11 ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.