Home அரசியல் பூச்சோங் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசம் – கோகிலன் கருத்து

பூச்சோங் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசம் – கோகிலன் கருத்து

628
0
SHARE
Ad

Kohilan-Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 16- வரும் பொதுத்தேர்தலில் கெராக்கான் கட்சி சார்பில் மூன்று இந்தியர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.

பூச்சோங் தொகுதியில் போட்டியிடவுள்ள கோகிலன் பிள்ளை, இந்த பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெறும்  வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக  பிரி மலேசியா இணையத் தளத்திற்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்தார்.

ஜ.செ.க.வை பிரதிநிதித்து கோபிந்த் சிங் இத்தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

#TamilSchoolmychoice

கோகிலன் பிள்ளை பூச்சோங் கம்போங் துன் ரசாக் என்ற பகுதியில் பிறந்தவர். தற்போது செலாயாங் வட்டாரத்தில் வசித்து வருகிறார்.

கெராக்கான் கட்சியின் உதவித் தலைவராகவும், சிலாங்கூர் மாநில தலைவராகவும் பதவி வகித்து வரும் கோகிலன் பிள்ளை நடப்பு வெளியுறவுத் துறை துணை அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த பொதுத்தேர்தலில் 12,593 வாக்குகள் வித்தியாசத்தில் கோபிந்த் சிங் பூச்சோங் தொகுதியில் வெற்றி வாகை சூடினார்.

இம்முறை  இத்தொகுதியில் 108,000 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் 43 விழுக்காட்டினர் சீனர்கள், 40 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள், 16 விழுக்காட்டினர் இந்தியர்கள், 1 சதவீதத்தினர் மற்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்.

பூச்சோங் தொகுதியில் நீங்கள் அக்கறை செல்லும் மூன்று முக்கிய அம்சங்கள் எது என்று கேட்டபோது அதற்கு கோகிலன் “போக்குவரத்து, தமிழ் – சீனப்பள்ளிகள், பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவை என்றார் அவர்.

உள்துறை அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தி பூச்சோங் வட்டாரத்தில் அதிகமான காவல் துறை ரோந்து பணிக்கு ஆவன செய்ய போவதாகவும் அதன் மூலம் பொதுமக்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த உத்தேசித்திருப்பதாகவும் கோகிலன் தெரிவித்தார்.