Home One Line P1 கொவிட்-19 நோயாளியுடன் தொடர்பில் இருந்ததால் சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டார்!

கொவிட்-19 நோயாளியுடன் தொடர்பில் இருந்ததால் சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டார்!

367
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததை அடுத்து சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

நோயாளி ஒரு தனியார் ஊடகவியலாளர் என்று அவர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை தனது அலுவலகத்தில் இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

டிசம்பர் 18- ஆம் தேதி வரை தாம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்த காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் அடாம் கூறினார்.

#TamilSchoolmychoice

அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

“கொவிட் -19- இன் தடுப்பு அல்லது சிகிச்சை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிறப்பித்த எந்தவொரு உத்தரவுக்கும் இணங்க எவருக்கும் விலக்கு இல்லை. தொற்றுநோயைக் கையாள்வதிலும், போராடுவதிலும் நாம் அனைவரும் பங்கை வகிக்க முடியும் என்று நம்புகிறோம். நான் வீட்டிலிருந்து வேலை செய்வேன். இதில் மெய்நிகர் மாநாடுகள் மூலம் கூட்டங்கள் மற்றும் விவாதங்களை நடத்துவதும் அடங்கும்,” என்று அவர் கூறினார்.