Home வாழ் நலம் மாங்கனி- சத்துப்பட்டியல்

மாங்கனி- சத்துப்பட்டியல்

964
0
SHARE
Ad

mangoகோலாலம்பூர், ஏப்ரல் 17- ‘பழங்களின் அரசன்’ என்ற சிறப்பு மாங்கனிக்கு உண்டு. முக்கனிகளில் முதன்மை இடம் மாங்கனிக்குத்தான். சுவை மற்றும் சத்துக்களிலும் ‘மா’வுக்கு முன்னணி இடம் உண்டு. அதிலுள்ள சத்துப்பட்டியலை அறிந்து கொள்வோம்.

மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். இமயமலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் கிடைக்கும்  பழ வகையைச் சேர்ந்தது மா. அனகார்டியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த இதன் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.

வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவங்களில் பல்வேறு அளவுகளில் மாங்கனி விளைகிறது. மஞ்சள், இளஞ்சிவப்பு-மஞ்சள், இளஞ்சிவப்பு-பச்சை நிறங்களில் கனிகள் விளையும். குடற்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், ரத்தப்புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படும் ஆற்றல் மாங்கனிக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

‘வைட்டமின் ஏ’ மாங்கனியில் அதிக அளவில் உள்ளது. 100 கிராம் மாங்கனியில் 765 மில்லிகிராம் அளவு ‘வைட்டமின் ஏ’ உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். கண்பார்வைக்கு உகந்த வைட்டமினாகும். புதிதாக பறித்த மாங்கனியில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கும். 100 கிராம் மாம்பழத்தில் 156 மில்லிகள் கிராம் பொட்டாசியம் இருக்கிறது.

2 மில்லிகிராம் சோடியமும் உள்ளது. இவை உடலும், உடற்செல்களும் வளவளப்புத் தன்மையுடன் இருக்க அவசியமானதாகும். மேலும் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். ‘வைட்டமின் பி-6’, ‘வைட்டமின் சி’, ‘வைட்டமின் இ’ நிறைய அளவில் உள்ளது. வைட்டமின் சி, உடலை நோய்த் தொற்றுக்கு எதிராக காக்கும்.

தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களையும் அகற்றும். ‘வைட்டமின் பி-6’, மூளைக்கு அவசியமான அமினோ அமிலம் சுரக்க துணைபுரியும். ரத்த செல்களை பாதிப்பதும், முடக்குவாதத்தை தூண்டுவதுமான ஹோமோசிஸ்டின் எனும் அமினோ அமிலத்தை கட்டுப்படுத்துவதிலும் பங்கெடுக்கிறது. தாமிர தாது நிறைய உள்ளது.

இது பல்வேறு நொதிகள் செயல்பட துணைக்காரணியாக விளங்கும். ரத்த சிவப்பμக்கள் உற்பத்தியிலும் இது பங்கு வகிக்கிறது. உடனடியாக ஜீரணம் ஆகும் நார்ச்சத்து நிறைய உள்ளது. மற்றும் பல புளோவனாய்டுகளும், தாது உப்புக்களும் குறைந்த அளவில் உள்ளன.

சாப்பிடும்முறை

மாங்கனியை கழுவிவிட்டு அப்படியே கடித்து சாப்பிடலாம். மாங்கனித் துண்டுகள் பழச் சாலட்டுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. பனிகட்டிகளுடன் சேர்க்கப்பட்ட மாங்கனிச் சாறு உலகம் முழுவதும் பிரபலமான சாறு வகை பானமாகும்.

மாங்கனிச் சாற்றை பாலுடன் சேர்த்து ‘மாங்கோ மில்க் ஷேக்’ ஆக சுவைக்கப்படுகிறது. ஜாம், பனிக்கூழ்  மற்றும் உணவு உற்பத்தி துறையில் மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது.  ஆசிய நாடுகளில் மாங்காய் ஊறுகாய், சட்னி பிரபலமாகும்.  பழுக்காத மாங்காய், குழம்புகளிலும் சேர்க்கப்படுகிறது.