Home அரசியல் சுல்கிப்ளி நோர்டின் தே.மு. வேட்பாளராக நியமனம்: இந்தியர்களை புண்படுத்தக்கூடிய செயலாகும்- சுரேந்திரன்

சுல்கிப்ளி நோர்டின் தே.மு. வேட்பாளராக நியமனம்: இந்தியர்களை புண்படுத்தக்கூடிய செயலாகும்- சுரேந்திரன்

493
0
SHARE
Ad

Surendran-Featureகோலாலம்பூர், ஏப்ரல் 17- பெர்காசா துணைத்தலைவர் டத்தோ        சுல்கிப்ளி நோர்டினை ஷாஆலாம் தொகுதிக்கு  வேட்பாளராக நியமித்திருப்பது அம்னோவில் பழமைவாத கொள்கைகள் கொண்ட குழுவினரின் கை மேலோங்கியுள்ளதைக் காட்டுகிறது என்று பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களுள் ஒருவரான சுரேந்திரன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தீவிரவாத இஸ்லாத்தை பின்பற்றுபவரான சுல்கிப்ளியை வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் தீவிர இஸ்லாமியர்களின் வாக்குகளை கவரும் விதமாக நேற்று, தேசியமுன்னணியின் தலைவர் நஜிப் துன் ரசாக் அவரை வேட்பாளராக அறிவித்தார்.

இந்தியர்களின் சமயத்தையும், அவர்கள் வணங்கும் தெய்வங்களையும் பகிரங்கமாக கிண்டல் செய்திருந்த சுல்கிப்ளியை வேட்பாளராக நிறுத்தியிருப்பது இந்தியர்களை புண்படுத்தியுள்ள செயலாகும் என்று பத்திரிக்கைச் செய்தியில் சுரேந்திரன் குறிப்பிட்டார்.

முன்னதாக சுல்கிப்ளி இந்தியர்களை, ‘கில்லிங்’ என்று கூறியது, வெள்ளத்தில் மூழ்கிய இந்தியர்களின் கடைகளை ஏன் அவர்களது கடவுள் காப்பாற்றவில்லை என்று கேள்வி எழுப்பியது, புனித நதியான கங்கையை விமர்சனம் செய்தது போன்ற அவரது செயல்கள் இந்திய சமூகத்தினரை அவர் மேல் மிகுந்த சினத்திற்குள்ளாக்கியுள்ளது.

2008-இல் ஓர் இந்து கோயிலை மலாய்க்கார்கள் அதிகமுள்ள இடத்திற்கு இடமாற்றம் செய்த பிகேஆர் அரசுக்கு எதிராக அவர்களின் தலைமையகத்திற்கு மாட்டுத்தலையுடன் ஊர்வலம் சென்றதற்காக அவர் மேல் தொடரப்பட்ட வழக்கில் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து தேசியமுன்னணி மற்றும் காவல்துறை மீது சுரேந்திரன் தனது அதிருப்தியையும், சந்தேகத்தையும் வெளிப்படுத்தினார்.

2010-இல் பாஸ் கட்சியைச் சேர்ந்த காலிட் மீது சுல்கிப்ளி தொடர்ந்த வழக்கால், அவர் பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன் பின் அவர் சுயேட்சை எம்.பியாக, தேசிய முன்னணிக்கு ஆதரவாக மாறினார். இம்முறை அவர் அதே பாஸ் கட்சியைச் சேர்ந்த காலிட் சமாட்டை ஷாஆலாம் தேர்தல் களத்தில் சந்திக்கவிருக்கிறார்.