Home One Line P1 எம்ஏசிசி: 4 ஷா ஆலாம் நகராட்சி மன்ற அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டனர்

எம்ஏசிசி: 4 ஷா ஆலாம் நகராட்சி மன்ற அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டனர்

531
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் சுங்கை பூலோவில் சட்டவிரோத வணிக வளாகங்களை பாதுகாக்க இலஞ்சம் பெற்ற விசாரணை தொடர்பாக நான்கு ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

அமலாக்க அதிகாரிகளுக்கு மாதத்திற்கு 300 ரிங்கிட் இலஞ்சம் கொடுத்ததாகக் கூறிய ஆச்சே ஆடவருக்கும், ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து நபர்களுக்கான தடுப்புக் காவல் உத்தரவு, இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 18 வரை நீடிக்கும் என்று நீதிபதி ஷா விரா அப்துல் ஹலீம் உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009- இன் பிரிவு 17 (அ)- இன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

நேற்று, நான்கு ஷா ஆலாம் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க வந்த போது, இங்குள்ள எம்ஏசிசி (ஊழல் தடுப்பு ஆணையம்) தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

‘ஹாட் பர்கர் மலேசியா’ என்ற முகநூல் தளத்தின் மூலம் இரண்டு காணொளிகள் சமீபத்தில் பரவியது.

42 வயதான முகமட் அஸ்ரி ஹமீட், சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதனை பாதுகாத்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டதும், இந்த பிரச்சனை சூடானது.

இந்த வெளிப்பாட்டைத் தொடர்ந்து, எம்ஏசிசி இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறையின் (JIPS) ஒத்துழைப்பைப் பெற்றது.