Home One Line P2 யூடியூப், ஜி-மெயில் உள்ளிட்ட தளங்களின் சேவைகளில் தடை

யூடியூப், ஜி-மெயில் உள்ளிட்ட தளங்களின் சேவைகளில் தடை

697
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கூகுள் சேவைகளை வழங்கும் தாய் நிறுவனமான அல்பாபெட் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளில் இன்று உலகம் முழுவதும் தடை ஏற்பட்டுள்ளன. கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை, யூடியூப் உள்ளிட்ட மற்ற சேவைகளிலும் தடைகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்தத் தளங்களைப் பயனர்கள் அணுகியபோது “something went wrong” என்ற ஆங்கில வாசகம் அல்லது “there was an error. Please Try again later” என்ற வாசகமும் திரையில் தோன்றின என ஊடகங்களும் பயனர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

இதுபோன்ற சேவைகளில் தரவுகளைச் சேமித்து வைக்கும் “செர்வர்” என்ற பரிமாற்றகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த சேவைத் தடைகள் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

கூகுள் போன்ற இணைய சேவைகள் வழங்கும் நிறுவனங்களிலும், சமூக ஊடகங்களிலும் இதுபோன்ற சேவைத் தடைகள் அடிக்கடி அண்மையக் காலங்களில் நிகழ்ந்து வருகின்றன.