Home One Line P1 அரசியலில் அன்வார் தொடர்ந்து எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு தலைமைத் தாங்க இயலும்

அரசியலில் அன்வார் தொடர்ந்து எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு தலைமைத் தாங்க இயலும்

372
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் ஜனநாயக அரங்கில் அரசியல் போட்டியை எதிர்கொள்வதில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் உறுதிப்பாட்டை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளுமாறு, அனைத்து பிகேஆர் மற்றும் நம்பிக்கை கூட்டணி ஆதரவாளர்களையும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கேட்டுக்கொண்டார்.

கொவிட் -19 தொற்றுநோய்க் காரணமாக மக்களின் தலைவிதியைப் பாதுகாக்க எதிர்க்கட்சியின் வேகத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று அவர் கூறினார்.

“பிகேஆர் மற்றும் நம்பிக்கை கூட்டணியின் அனைத்து ஆதரவாளர்களும் உற்சாகமாக இருக்கவும். உங்களின் உறுதியை சீராக்கவும். நாட்டின் ஜனநாயக அரங்கில் அரசியல் போட்டியை எதிர்கொள்ள வலிமையை வளர்ப்பதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் நான் அழைப்பு விடுக்கின்றேன். அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து சமூக அமைப்புகளையும் உள்ளடக்கிய ஜனநாயக சார்பு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் எண்ணங்களையும் தொடர்ந்து திரட்டுவதற்கு அன்வார் இப்ராகிமின் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“பிகேஆர் தலைவர், நம்பிக்கை கூட்டணித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் இப்ராகிமின் தலைமை சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்துவதில் வெற்றியை அடைய இந்த ஜனநாயக சக்தியை வழிநடத்த முடியும் என்று நான் நம்புகிறேன். எனவே, நாம் ஒருபோதும் காரணம் கூறக்கூடாது. போராட்டத்தின் இலக்கை புறக்கணிக்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.