பிரிட்டன்: கொவிட்-19 தொற்று தற்போது முன்பை விட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கோடிக்கணக்கானவர்களை பாதித்து மில்லியன் கணக்காணவர்கள் உயிர் இழந்துள்ள நிலையில், இந்த நச்சுயிர் தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நிலைக்கு உருமாறியுள்ளது.
இங்கிலாந்தில் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தலைநகர் இலண்டனில் முன்பைவிட அதிவேகத்தில் கொவிட்-19 தொற்று பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நச்சுயிரின் புதிய வடிவம் இது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சில இடங்களில் தொற்று எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் அனைத்து சோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளன. பிபைசர் தடுப்பு மருந்தினை இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் ஏற்கெனவே பொதுமக்களுக்கு செலுத்தத் தொடங்கிவிட்டன.
இங்கிலாந்தில் பல்வேறு இடங்களில் தீவிர கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.