Home One Line P1 பிபைசர் 95 விழுக்காடு செயல்திறன் கொண்டதால்தான் அரசு தேர்வு செய்தது

பிபைசர் 95 விழுக்காடு செயல்திறன் கொண்டதால்தான் அரசு தேர்வு செய்தது

415
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மருத்துவ பரிசோதனைகளின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், பிபைசர் வெளியிட்டுள்ள கொவிட் -19 தடுப்பு மருந்திற்கு 95 விழுக்காடு செயல்திறன் இருப்பதால்தான் பயன்பாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது என்று இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை டிசம்பர் 10- ஆம் தேதி ‘தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசினில்’ வெளியிடப்பட்டதாகவும், தடுப்பு மருந்தின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கான தரவுகளை அரசாங்கம் அணுகுவதாகவும் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

“இந்த தடுப்பு மருந்துக்கு பிரிட்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கனடா, சவுதி அரேபியா, மெக்ஸிகோ மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட ஏழு நாடுகளிலிருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இருப்பினும், மலேசியாவில் இறுதி கொள்முதல் முடிவு மற்றும் தடுப்பு மருந்து பயன்படுத்துவது சுகாதார அமைச்சின் தேசிய மருந்து ஒழுங்குமுறை பிரிவின் பதிவு மற்றும் ஒப்புதலுக்கு உட்பட்டது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இது தவிர, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 70 விழுக்காடு வரை தடுப்பு மௌர்ந்து செலுத்தபப்டும் மென்றும், இதனைப் பெற இருப்போர்களை பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கைரி கூறினார்.