Home One Line P1 90 நாட்கள் ஆகியும் முடா கட்சி பதிவு செய்யப்படவில்லை!

90 நாட்கள் ஆகியும் முடா கட்சி பதிவு செய்யப்படவில்லை!

444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் தலைமையிலான முடா கட்சி இன்று அதன் பதிவுக்கு ஒப்புதல் அளிக்க சங்கப் பதிவாளரை அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியது.

இப்போதைக்கு, இப்புதிய கட்சி 90 நாட்களுக்கு முன்பு பதிவு செய்வதற்காக விண்ணப்பம் அனுப்பப்பட்ட பின்னர், அவர்களின் பதிவு நிலை குறித்து சங்கப் பதிவாளரின் விளக்கத்தைக் கோருகிறது. அதற்கு அது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறது.

கட்சியும் அதன் ஆதரவாளர்களும் ஒரு சுவரொட்டியைப் பகிர்ந்துள்ளனர்: “ஹலோ ஆர்ஓஎஸ், எப்போது பதிவு செய்வீர்கள்?”

#TamilSchoolmychoice

முடாவின் பதிவை வேண்டுமனே காலம் கடத்துவதாகவும், தேசிய கூட்டணி மற்றும் பெர்சாத்து ஆகிய கட்சிகளின் பதிவு விரைவாக செய்யப்பட்டதை அதன் ஆதரவாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“தேசிய கூட்டணி, 3 நாட்களில் நிறைவேற்றப்பட்டது ( சபா தேர்தலின் போது). பெர்சாத்து 30 நாட்களில் பதிவு செய்யப்பட்டது. முடா, 90 நாட்கள் ஆகியும் பதிவு செய்யபடவில்லை. இது ஒரு தரப்புக்கு சார்புடையதாக தோன்றுகிறது. தேசிய கூட்டணி கீழ் ஜனநாயகம் தேசிய முன்னணியை விட மோசமானதா என்ன?” என்று லிம் வீ ஜீட் எழுதியுள்ளார்.