Home One Line P1 கிள்ளான் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்

கிள்ளான் மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்

444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த இரண்டு வாரங்களில், கிள்ளானில் உள்ள துவாங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் பல மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த விவகாரம், மருத்துவமனையில் கொவிட் -19 தொற்று பரவுவது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

கொவிட் -19 உடன் தொடர்புடைய சுகாதார பிரச்சனைகளுக்காக தனித்து வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் எதிர்மறையாக சோதிக்கப்படுவதாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், கொவிட் -19 அறிகுறிகள் அதன் பின்னர் தோன்றி, தொற்றுக்கு ஆளாகுவதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தொற்றுக்கு ஆளானதை அடுத்து , மேலதிக சிகிச்சைக்காக சுங்கை புலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறியுள்ளது.

மலேசிய சுகாதார அமைச்சின் பிரதிநிதி ஒருவர் இன்று மருத்துவமனையில் பரவும் சாத்தியம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குனர் டாக்டர் ஷா’ரி நகாடிமனை தொடர்பு கொண்டபோது, ​​இது தொடர்பாக விளக்கமளிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தினார்.

“அங்கு செவிலியர்கள் மற்றும் கொவிட் -19 பாதிக்கப்பட்ட நோயாளிகள் சம்பந்தப்பட்ட தொற்று சம்பவங்கள் உள்ளன. எனவே, மத்திய அமைச்சின் பிரதிநிதிகள் அங்கு சென்று மருத்துவமனையுடன் மேலும் தெளிவுபடுத்துகிறார்கள். எனவே என்னால் மேலும் கருத்து தெரிவிக்க முடியாது, ” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட கிள்ளான் மருத்துவமனை ஊழியர்கள் கடந்த மூன்று வாரங்களில் 50 கொவிட் -19 நேர்மறை நோயாளிகளாக மாறியுள்ளனர்.

சிலாங்கூரில் உள்ள பல பொது மருத்துவமனைகளிலும் இதேதான் நடந்துள்ளது.

இருப்பினும், மருத்துவமனையில் தொற்று ஏற்பட்டதா அல்லது மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பு நோயாளி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.