Home One Line P1 இனியும் தேசிய கூட்டணி அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம்!

இனியும் தேசிய கூட்டணி அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம்!

538
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணியின் இரு முக்கிய தலைவர்கள், கூட்டணி அனைத்து எதிர்க்கட்சியையும் ஒன்றிணைக்க, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

கூட்டுப் போராட்டத்தின் பாதையில் பொதுவான வலிமையைக் கட்டியெழுப்ப ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது என்று அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில் வலியுறுத்தினர்.

செவ்வாயன்று 2021- ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் முடிவைக் கருத்தில் கொண்டு, இனி வாய்ப்புக்காக பயன்படுத்திக் கொள்ளும் அரசு தரப்பு அரசியல்வாதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று அவர்கள் கூறினர்.

#TamilSchoolmychoice

“நம்பிக்கை கூட்டணி இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டும். செவ்வாயன்று நம்முடன் நின்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைப்பதில் மீண்டும் அரசியல் மாற்றம் தேவை. நம்பிக்கை கூட்டணி சந்தர்ப்பவாத அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேரத்தை வீணாக்கக் கூடாது,” என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாயன்று, 111 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து, ​​2021 வரவு செலவுத் திட்டம் மூன்று வாக்குகள் குறைந்த பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. 108 பேர் வரவு செலவுத் திட்டத்தை நிராகரித்தனர்.

இதற்கிடையில், , கடந்த செவ்வாயன்று 2021 வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது வாசிப்பில் தோற்கடிக்க முடியும் என்று நம்பிக்கை கூட்டணி நம்பி ஏமாற்றம் கண்ட நாள் என்று முகமட் சாபு மற்றும் குவான் எங் கூறினர்.

“அன்வாரை ஆதரித்தவர்கள் உட்பட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நம்பிக்கை கூட்டணியுடன் வாக்களிக்கவில்லை. இந்த அரசாங்க உறுப்பினர்கள் அரசியல் விளையாட்டுகளில் அவர்களுக்காக நன்மைகளை அறுவடை செய்வதில் வல்லவர்கள் என்பது தெளிவாகிறது,” என்று அவர்கள் கூறினர்.

இந்த அறிக்கைக்குப் பிறகு நடக்க திட்டமிடப்பட்டிருந்த நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.