Home One Line P2 தி கிரே மேன்: இரண்டாவது ஹாலிவுட் படத்தில் தனுஷ்!

தி கிரே மேன்: இரண்டாவது ஹாலிவுட் படத்தில் தனுஷ்!

944
0
SHARE
Ad

சென்னை: நடிகர் தனுஷ், கிரே மேன் நாவலை தழுவி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் தற்போது இணைந்திருக்கிறார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கால் பதித்து, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் தனுஷ் நடித்துள்ளது பெருமைக்குரியதே.

இந்த திரைப்படத்தை ஏவென்ஜர்ஸ் பட இயக்குநர்களான ஆண்டனி, ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர்.

#TamilSchoolmychoice

தனுஷுடன் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவான்ஸ், வாக்னர் மோரா, அனா டி ஆர்மஸ் ஜெசிக்கா ஹென்விக், ஜுலியா பட்டர்ஸ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தற்போது, தனுஷ் தமிழில் ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் அத்ராங்கி ரே படத்தில் நடிக்கிறார்.