Home One Line P1 சிலாங்கூர், கோலாலம்பூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

சிலாங்கூர், கோலாலம்பூர், சபாவில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

462
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் சபாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் இந்த நீட்டிப்பு உலு சிலாங்கூர் மற்றும் சாபாக் பெர்னாம் மாவட்டங்களுக்கு பொருந்தாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இதற்கிடையில், நெகிரி செம்பிலானில் போர்ட் டிக்சன் மற்றும் சிரம்பான், ஜோகூரில் உள்ள ஜோகூர் பாரு, பத்து பகாட் மற்றும் கூலாய் ஆகிய இடங்களில் டிசம்பர் 31 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அவர் கூறினார்.