Home One Line P1 நஜிப் தாயார் காலமானார்

நஜிப் தாயார் காலமானார்

764
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தாயார் தோபுவான் ஹாஜா ராஹா இன்று வெள்ளிக்கிழமை காலமானார். இது குறித்து நஜிப் ரசாக் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று இங்குள்ள பிரின்ஸ் கோர்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  தோபுவான் ஹாஜா ராஹாவை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

மொகிதின் தோபுவான் ஹாஜா ராஹாவைச் சந்திக்க வந்தபோது நஜிப் துன் ரசாக் உடனிருந்தார். நஜிப்பின் சகோதரர், முன்னாள் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவர் நசிர் ரசாக்கும் அப்போது அங்கிருந்தார். அவரிடமும் மொகிதின் யாசின் நலம் விசாரித்தார்.

#TamilSchoolmychoice

அதனை அடுத்து மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் மற்றும் சுல்தான் நஸ்ரின் ஆகியோரும் நலம் விசாரித்துச் சென்றனர்.

மலேசியாவின் இரண்டாவது பிரதமரும் நஜிப்பின் தந்தையுமான துன் அப்துல் ரசாக்கின் துணைவியாரான தோபுவான் ஹாஜா ராஹாவுக்கு வயது 87.