
கோலாலம்பூர்: வரலாற்றில் முதன் முறையாக அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்த பெண்மணியான ரோஹானா ஜுப்ரிக்கு இன்று வெள்ளிக்கிழமை முதl கடற்படை அதிகாரி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மலேசிய கடற்படையில் பெண்களின் திறமையும், அவர்களின் நம்பகத்தன்மையும் இதன் மூலமாக உயர் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி டான்ஶ்ரீ முகமட் ரேசா சனி தெரிவித்திருக்கிறார்.
முதல் கடற்படை அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கும் கேப்டன் ரோஹானா முன்னதாக கடற்படை தலைமையகத்தில், உபகரண மூத்த இயக்குநராகவும், மலேசிய ஆயுதப் படைகளின் தேசிய பணிக்குழுவில் உதவி தலைமை பணியாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
”என்னிடமுள்ள கல்வி மற்றும் ஈடுபாட்டின் அடிப்படையில், ஆண்களுக்கு நிகராக நானும் பணியாற்ற முடியும் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளேன்,” என்று ரோஹானா ஜுப்ரி கூறினார்.
அரச மலேசிய கடற்படையின் செயற்குழுவில், இதற்கு முன்னர் இருந்த ஆண்களுக்கு நிகராக, தற்போது இவரும் உயர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
-பெர்னாமா