Home One Line P1 பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

590
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது நல்வாழ்த்துகளை மலேசிய கிறிஸ்துவ சமூகத்தினருக்குத் தெரிவித்துக் கொண்டார்.

மலேசியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் அனைத்து கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த மலேசியர்களும் கிறிஸ்துமஸ் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், அனைவரும், இந்த கொவிட்-19 காலகட்டத்தில் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளைப் பின்பற்றிக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நமக்கு நாமே முன்களப் பணியாளர்களாக அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, கொவிட்-19 தொற்றுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்வோம்என்றும் பிரதமர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice