Home One Line P1 ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்

ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்

609
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் அண்ணாத்த படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆயினும், உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இரத்த அழுத்தம் மட்டும் சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

ரஜினிக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவர் அடுத்த ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாத்த திரைப்படத்தில் நடிக்க, ரஜினிகாந்த் தனி விமானம் மூலம், கடந்த 13-ஆம் தேதி ஹைதராபாத் சென்றிருந்தார்.