Home One Line P1 வெளிநாட்டு தொழிலாளர்களை கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பாத முதலாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்

வெளிநாட்டு தொழிலாளர்களை கொவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பாத முதலாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்

430
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வெளிநாட்டு தொழிலாளர்கள் கட்டாய கொவிட் -19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த மறுப்பது உட்பட, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்காத மற்றும் பிடிவாதமாக இருக்கும் முதலாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் அபாயம் உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டால், முதலாளிகளுக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

கிள்ளானில் உள்ள ஒரு இரப்பர் கையுறை தொழிற்சாலை நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீறியதற்காக 1,000 ரிங்கிட் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டபோது அரசாங்கம் விமர்சிக்கப்பட்டது குறித்து அமைச்சர் கருத்து தெரிவிக்கும்போது இதனைக் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஒரு தொழில்துறை தொழிற்சாலைக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக செய்தி உள்ளது. எனவே இது மக்களை கோபப்படுத்துகிறது. குற்றம் மிகவும் பெரியது, ஆனால், அபராதம் 1,000 ரிங்கிட் மட்டுமே,” என்று அவர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 சட்டம், குற்றங்களைச் செய்யும் முதலாளிகளுக்கு அதிகபட்சமாக 1,000 ரிங்கிட் அபராதம் மட்டுமே விதிக்க அனுமதிக்கிறது என்று இஸ்மாயில் மீண்டும் விளக்கினார்.

“நாங்கள் 10,000 ரிங்கிட் வரை அபராதத்தை விதிக்க விரும்பினால், எங்களால் முடியும், ஆனால், இந்த சட்டம் திருத்தப்பட நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

1.7 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கொவிட் -19 கட்டாய பரிசோதனை டிசம்பர் 1 முதல் நான்கு மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களையும் உள்ளடக்கியது. அதாவது சிலாங்கூர், பினாங்கு, சபா, கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

டிசம்பர் 24-ஆம் தேதி, 1,990 முதலாளிகளால் 42,248 வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர் என இஸ்மாயில் சப்ரி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

எனவே, 2021 ஜனவரி 1 முதல் இந்த அறிவுறுத்தலுக்கு இணங்காத முதலாளிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.