Home One Line P2 கொவிட்-19: இந்தியாவில் மரணமுற்றவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள்

கொவிட்-19: இந்தியாவில் மரணமுற்றவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள்

531
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களில் 70 விழுக்காட்டினர் ஆண்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவர்களில், 45 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 விழுக்காட்டினர் 45- 60 வயதுக்குட்பட்டவர்கள். 14 விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இந்தியாவில் கொவிட்-19 தொற்று ஓரளவிற்கு ஓய்ந்து மீண்டும் சீற்றமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது, இந்நிலையை மேலும் மோசமாக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதுவும், தற்போது, பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் ஒரு சிலர் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தங்களை மறைத்துக் கொண்டுள்ளது நிலைமையை கட்டுக்கடங்காமல் கொண்டு செல்லும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.