கலிபோர்னியா: கலிபோர்னியாவில் 45 வயதான ஒரு செவிலியர் பிபைசர் கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இரண்டு வெவ்வேறு உள்ளூர் மருத்துவமனைகளில் செவிலியர் மத்தேயு டபிள்யூ. டிசம்பர் 18 அன்று ஒரு முகநூல் பதிவில் தனக்கு பிபைசர் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகக் கூறினார். மறுநாள் கையில் புண் இருந்ததாகவும், ஆனால், வேறு எந்த பக்கமும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
ஆறு நாட்களுக்குப் பிறகு, கிறிஸ்துமஸ் முதல் நாளன்று, கொவிட் -19 பிரிவில் பணிபுரிந்த பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் உடல் குளிர் எடுத்து, பின்னர் தசை வலி மற்றும் சோர்வுடன் காணப்பட்டார்.
அவர் ஒரு மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். கிறிஸ்மஸுக்கு அடுத்த நாள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானதாக கூறப்பட்டுள்ளது.
சான் டியாகோவின் குடும்ப சுகாதார மையங்களுடன் தொற்று நோய் நிபுணரான கிறிஸ்டியன் ராமர்ஸ் கூறுகையில், இந்த சம்பவம் எதிர்பாராதது அல்ல என்று கூறினார்.
“தடுப்பு மருந்து மருத்துவ பரிசோதனைகளிலிருந்து எங்களுக்குத் தெரியும். தடுப்பு மருதிலிருந்து பாதுகாப்பை உருவாக்கத் தொடங்க 10 முதல் 14 நாட்கள் ஆகும்,” என்று ராமர்ஸ் கூறினார்.
“அந்த முதல் மருந்து உங்களுக்கு 50 விழுக்காடு செயல்படுகிறது, மேலும் 95 விழுக்காடு வரை செயல்பட உங்களுக்கு இரண்டாவது மருந்து தேவை,” என்று ராமர்ஸ் மேலும் கூறினார்.