Home One Line P1 1எம்டிபி ஊழல்: செத்தி அசிஸ் குடும்பத்திற்கு எதிராக அம்னோ இளைஞர் பிரிவு புகார்

1எம்டிபி ஊழல்: செத்தி அசிஸ் குடும்பத்திற்கு எதிராக அம்னோ இளைஞர் பிரிவு புகார்

469
0
SHARE
Ad
செத்தி அக்தார் அசிஸ்

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தர் அசிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அம்னோ இளைஞர் பிரிவு இன்று காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

அதன் செயற்குழு உறுப்பினர் ஷாருல் நஸ்ருன் கமருடின் கூறுகையில், அதிகாரிகள் விசாரணைகளைத் திறந்து குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான அறிக்கையை வழங்க இந்த புகார் அளிப்பதாகக் கூறினார்.

செத்தியின் குடும்ப உறுப்பினர்கள், தொழிலதிபர் ஜோ லோவிடம் இருந்து 100 மில்லியனுக்கும் அதிகமான தொகையைப் பெற்றதாக ஒரு வலைப்பதிவு இடுகை கூறியதைத் தொடர்ந்து இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“காவல் துறையும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் இந்த பிரச்சனைக்கு முன்னுரிமை அளிக்க முடியும். கட்டுரையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று ஷாருல் டாங் வாங்கி காவல் துறை தலைமையகத்திற்கு வெளியே கூறினார்.

செத்தியின் கணவர் தௌபிக் அய்மான் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளான அலிப் அய்மான் மற்றும் அப்துல் அசிஸ் ஆகிய மூன்று நபர்கள் குறித்த  வலைப்பதிவு இடுகை சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக ஷாருல் கூறினார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அவரது பெயரில் ஒரு கணக்கைத் திறக்குமாறு ஏன் செத்தி அறிவுறுத்தினார் என்று ஷாருல் கேள்வி எழுப்பினார். குறிப்பாக சவுதி அரேபியாவிடம் இருந்து நன்கொடைகளைப் பெற இது பயன்படுத்தப்பட்டுள்ளது.