கோலாலம்பூர்: ஒரு பெரிய கூட்டணி அமைக்கப்பட்டால் நம்பிக்கை கூட்டணி, எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் என்றாலும், 15- வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி அளிப்பதற்கு அதுதான் முக்கியக் காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அமானா துணைத் தலைவர் சாலாஹூடின் அயூப் கருதுகிறார்.
கூட்டணியில் வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் மற்றும் பெஜுவாங் தலைவர் முக்ரிஸ் மகாதீர் போன்ற பல தலைவர்கள் வெற்றி பெற உதவும் தலைவர்களாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
“நிச்சயமாக நம்பிக்கை கூட்டணி ஒப்பந்தத்தில் அன்வார் பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட்டார். ஆனால், இதன் பொருள் எதிர்க்கட்சிக்கு இது வெற்றியை அளிக்கும் உத்தரவாதம் அல்ல. நம்பிக்கை கூட்டணியில் பல தலைவர்கள் உள்ளனர். இன்னும் பல தலைவர்கள் கூட்டணியை வலுப்படுத்த உதவலாம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.