Home One Line P1 வருடம் முடிந்தாலும், கொவிட்-19-க்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை!

வருடம் முடிந்தாலும், கொவிட்-19-க்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை!

506
0
SHARE
Ad

புத்ராஜெயா: கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் போர் இன்னும் முடிவடையவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றுநோயை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு மக்களையும், சுகாதார அமைச்சையும் ஒருங்கிணைப்பது தேவைப்படுவதால் போராட்டம் இன்னும் கடுமையானதாகி வருகிறது.

நாட்டில் கொவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் சுகாதார அமைச்சின் முயற்சிகள் தொடரும் என்றும், பொது சுகாதார வசதிகள் இதுவரை தொற்றுநோயை கட்டுப்படுத்த முடிந்தது என்றும் சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

#TamilSchoolmychoice

அனைத்து மலேசியர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில், டாக்டர் நூர் ஹிஷாம் மீண்டும் கூடல் இடைவெளியைக் கவனித்துக் கொள்வது, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது போன்ற நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்குமாறு மக்களுக்கு நினைவுபடுத்தினார்.

“முடிந்தால், 10- க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டாம். சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை கடைபிடிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

கொவிட் -19 தொற்று ஒரு வருடத்திற்கு கூட்டாக எதிர்த்துப் போராடிய அனைத்து சுகாதார அமைச்சின் ஊழியர்கள், முன்னணி வீரர்கள் மற்றும் ஊடக ஊழியர்களுக்கும் டாக்டர் நூர் ஹிஷாம் நன்றி தெரிவித்தார்.

“யுத்தம் சுகாதார ஊழியர்களை, மக்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைய செய்துள்ளது. நாம் இன்னும் வெற்றிபெறவில்லை. 2021- ஆம் ஆண்டில் மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டில் கொவிட் -19 தொற்று சங்கிலியை உடைக்க முடியும் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.