பிக் பாஸ் இல்லத்திலிருந்து பிரபல தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர் அனிதா சம்பத் கடந்த வாரம் பெரும்பான்மை இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.
கேப்பிரியல்லா காப்பாற்றப்பட்டார்
அவர்களில் கேப்பிரியல்லா காப்பாற்றப்பட்டிருப்பதாக சனிக்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், எஞ்சிய நால்வரில் முதலில் சோம் சேகர் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். பின்னர் ஆஜித் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
ஆஜித்தை மேடைக்கு அழைத்த கமல்ஹாசன் அவருடன் பிக்பாஸ் இல்லம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.