Home One Line P1 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து வெளிநாடுகளுக்கு விநியோகிக்கப்படாது

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து வெளிநாடுகளுக்கு விநியோகிக்கப்படாது

594
0
SHARE
Ad

புது டில்லி: இந்திய நாட்டின் தயாரிப்பான கொவிட்-19 தடுப்பு மருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பு மருந்துகளின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அண்மையில் அனுமதி அளித்திருந்தது.

இதையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

#TamilSchoolmychoice

இந்த தடுப்பு மருந்து முழுவதுமாக இந்திய மக்களின் நன்மைக்காக செயல்படுத்தப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடர் பூனாவாலா கூறினார்.

முதல் 100 மில்லியன் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்திய அரசுக்கு விற்கப்படும். தற்போதைய சூழலில் தனியார் சந்தையிலும் இந்த தடுப்பு மருந்துகள் விற்கப்படாது என்று அவர் கூறினார். இந்திய அரசுக்கு மட்டுமே தேவைக்கேற்ப விற்கப்படும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப இந்த தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.