Home One Line P1 ‘உத்தரவுக்கு இணங்காத மதுபான விடுதிகளின் உரிமத்தை இரத்து செய்யுங்கள்!’- இஸ்மாயில் சப்ரி

‘உத்தரவுக்கு இணங்காத மதுபான விடுதிகளின் உரிமத்தை இரத்து செய்யுங்கள்!’- இஸ்மாயில் சப்ரி

451
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஊராட்சி மன்றங்கள் மதுபான விடுதிகள் மற்றும் இரவு விடுதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சகம் மாநில அரசாங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

மதுபான விடுதி மற்றும் இரவு விடுதி நடத்துபவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய கடுமையான நடவடிக்கை, அவர்களின் இயக்க உரிமங்களை இரத்து செய்வதையும் உள்ளடக்கியது என்று இஸ்மாயில் கூறினார். அவை தடுப்புப்பட்டியலில் வைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தொற்றுக் காலத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பலர் இன்னும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

ஜனவரி 1- ஆம் தேதி, நாடு முழுவதும் இரவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளில் மொத்தம் 623 பேர் கைது செய்யப்பட்டனர்.