Home One Line P1 பொதுத் தேர்தலை நடத்தக் கோரும் அம்னோவின் செயல் சுயநலமிக்கது

பொதுத் தேர்தலை நடத்தக் கோரும் அம்னோவின் செயல் சுயநலமிக்கது

442
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மொத்தம் 13 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தலை நடத்த அம்னோ தொடர்ந்து கோரி வருவதை விமர்சித்துள்ளனர். கொவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பு மற்றும் பல மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கையை அவர்கள் எதிர்ப்பதாகக் கூறியுள்ளனர்.

நாட்டில் நேற்று திங்கட்கிழமை 1741 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதையும், மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 120,818- ஆக உள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், பல மாநிலங்கள் இப்போது கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, இதுவரை 15,000- க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

“இந்த தொற்றுநோய் காலகட்டத்தில் அண்மையில் வேலையின்மை அதிகரிப்பு மற்றும் பல குடும்பங்களின் வருமானம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இதுபோன்ற சூழ்நிலையில் தேர்தலுக்கான அம்னோவின் தொடர்ச்சியான கோரிக்கையால் நாங்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறோம்.

“மக்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, மலேசியர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை தியாகம் செய்வதன் மூலம், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான கடைசி முயற்சியாக தேர்தலைப் பயன்படுத்த அம்னோ விரும்புகிறது,” என்று அவர்கள் ஓர் அறிக்கையில் விளக்கினர்.

இந்த கூட்டு அறிக்கையை டேரல் லீக்கிங் (பெனாம்பாங்), சைட் சாதிக் (மூவார்), முகமட் அசிஸ் ஜம்மான் (செபாங்கார்), ஹன்னா இயோ (செகாம்பூட்) இயோ பீ இன் (பக்ரி), பாரு பியான் (செலாங்காவ்), சிவராசா ராசையா (சுங்கை பூலோ), சலாவுடின் அயூப் (புலாய்), அமிருடின் ஹம்சா (குபாங் பாசு), தியோ நீ சிங் (கூலாய் ) இஸ்னாராய்சா முனிரா மஜிலிஸ் (கோத்தா பெலுட்), மஹ்பூஸ் உமர் (போகோ சேனா) மற்றும் காலிட் சமாட் (ஷா ஆலம்) ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.