Home One Line P1 தினசரி கொவிட் -19 சம்பவங்கள் மார்ச் நடுப்பகுதியில் 8,000- ஐ எட்டக்கூடும்

தினசரி கொவிட் -19 சம்பவங்கள் மார்ச் நடுப்பகுதியில் 8,000- ஐ எட்டக்கூடும்

544
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நோய்த்தொற்று வீதம் 1.2 ஆக இருந்தால், மார்ச் நடுப்பகுதியில் தினசரி கொவிட் -19 நோய்த்தொற்றுகள் 8,000 வரை எட்டக்கூடும் என்று சுகாதார அமைச்சகம் மதிப்பிடுகிறது.

அமைச்சின் தொற்றின் பரவல் குறித்த மே 31 வரையிலான வரைப்படத்தை டுவிட்டரில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்டார்.

1.2 உடன் மலேசியா ஜனவரி நான்காவது வாரத்திற்குள் 3,000 தினசரி சம்பவங்களை மட்டுமே எட்டும் என்று அமைச்சகம் முன்னரே கணித்திருந்தது.

#TamilSchoolmychoice

இருப்பினும், மலேசியா இன்று 3,000 சம்பவங்களைக் கடந்தது. இன்று, 3,027 கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் அறிவித்தார்.

அமைச்சின் கணிப்புகளின்படி, மலேசியா பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் 5,000 சம்பவங்களையும், மார்ச் மூன்றாவது வாரத்தில் 8,000 சம்பவங்களையும் பதிவு செய்யும்.

இதற்கிடையில், 1.1 தொற்று வீதம், மலேசியாவின் தினசரி சம்பவங்கள் பிப்ரவரி இரண்டாவது வாரத்திற்குள் 3,000 தினசரி சம்பவங்களையும், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் 5,000 மற்றும் மே நான்காம் வாரத்திற்குள் 8,000 சம்பவங்களையும் மட்டுமே அடைய வேண்டும்.

நேற்று, சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம், தற்போதைய தொற்று வீதம் 1.1 முதல் 1.2 வரை இருப்பதாக கூறினார்.

இருப்பினும், புத்தாண்டு ஒன்றுகூடலுக்குப் பிறகு அடுத்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.