Home One Line P2 கொவிட்-19 தொற்று காரணமாக மூளை பாதிப்படைகிறது

கொவிட்-19 தொற்று காரணமாக மூளை பாதிப்படைகிறது

449
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொவிட்-19 தொற்றை உடல் எதிர்கொள்வதன் விளைவாக மூளை படிப்படியாக சேதமடைவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பொதுவாக காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, உடல் சோர்வு, தசை வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை கொவிட்-19 தொற்றுக்கு அறிகுறிகளாக கூறப்படுகின்றன. இதுபோக வயிற்று வலி, தலைவலி, வயிற்றுப் போக்கு ஆகியவையும் அறிகுறிகள் என கூறப்படுகின்றன.

ஆனால், தொற்றுக் கண்டவர்களுக்கு மூளை படிப்படியாக சேதமடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

2019- ஆம் ஆண்டு இறுதியில் சீனா வூஹானில் இந்த தொற்று பரவத் தொடங்கியது. அப்போது முதல் இப்போது வரை தினசரி கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.

பல நாடுகளில் தடுப்பு மருந்து வி நியோகம் செயல்படத் தொடங்கியதை அடுத்து புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

​கொவிட்-19 தொற்று காரணமாக உயிரழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகளில், மூளையில் உள்ள இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.