மலாய்க்காரர்களையும், மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தனது கருத்துடன் நிற்பதாக அவர் கூறினார். இது அம்னோ தலைமையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சிலருக்காக, தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள மலாய் தலைவர்களிடையே உள்ள இடைவெளியைக் குறைக்க அவர் செயல்படுவார் என்று கூறினார்.
“அவர்கள் இப்போது எனது நிலைப்பாட்டிற்கு உடன்படமாட்டார்கள். ஆனால் காலப்போக்கில், பலர் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான அவர் கூறினார்.
பெர்சாத்துவுக்கு அதன் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கான அம்னோவின் காரணங்களில் ஒன்று, அம்னோ தலைவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை கைவிட அரசாங்கம் மறுத்ததன் காரணம் என்ற தற்போதைய பொதுச் செயலாளர் அகமட் மஸ்லானின் சமீபத்திய அறிக்கை குறித்து கேட்கபட்ட போது, “நீதிமன்றம் மற்றும் நீதித்துறை விஷயங்களில் அரசாங்கத்தின் தலையீடு நடக்கக்கூடாது என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். அம்னோ சட்டத்தின் ஆட்சியையும் அதிகாரங்களைப் பிரித்தல் கொள்கையையும் மதிக்கிறது, ”என்று அவர் கூறினார்.