Home One Line P1 ஜசெகவுடன் கூட்டணி வைக்க எண்ணம் இருந்திருந்தால், அது பேராக்கில் நடந்திருக்கும்!

ஜசெகவுடன் கூட்டணி வைக்க எண்ணம் இருந்திருந்தால், அது பேராக்கில் நடந்திருக்கும்!

447
0
SHARE
Ad
ஷாரில் ஹம்டான்

கோலாலம்பூர்: அம்னோ மற்றும் ஜசெக இடையே ஒத்துழைப்பு பற்றிய பேச்சுவார்த்தை இருப்பதாக கூறப்படுவதை அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் ஷாரில் சுபியன் ஹம்டான் மறுத்துள்ளார்.

இது குறித்து உச்சமன்றக் கூட்டத்தில், ஜசெக மற்றும் பிகேஆருடனான பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் முடிவு செய்யப்படவில்லை என்று அம்னோ தலைவர் அகம்ட் சாஹிட் ஹமிடி கூட பலமுறை வலியுறுத்தினார் என்றும் அவர் கூறினார்.

இது அம்னோவால் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“சமீபத்தில் உட்பட பல்வேறு மட்டங்களில் கட்சித் தலைமைக்கு முன்னால் நடந்த ஒரு திறந்த மற்றும் தனிப்பட்ட சந்திப்பில், அம்னோ தலைவர் பலமுறை ஜசெகவுடன் ஒத்துழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அம்னோ ஜசெகவுடன் ஒத்துழைக்க விரும்பினால், பேராக்கில் மந்திரி பெசார் மாற்றத்தின் போது அதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால், அது நடக்கவில்லை, ”என்று அவர் முகநூலில் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசிய முன்னணி முன்னாள் பொதுச் செயலாளர் அனுவார் மூசாவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன. கட்சிக்கும் ஜசெகவுக்கும் இடையில் முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்று அவர் கூறினார்.

பேராக்கில் மந்திரி பெசார் மாற்றத்தின் நெருக்கடியின் போது அம்னோவிற்கும் ஜசெகவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு பற்றிய கேள்வி எழுந்தது. இரு கட்சிகளும் மாநில அரசை அமைப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகக் கூறினாலும், அது செயல்படவில்லை.