Home One Line P1 பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க நினைக்கும் அம்னோவின் முடிவு நேர்மையற்றது!

பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க நினைக்கும் அம்னோவின் முடிவு நேர்மையற்றது!

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான அரசியல் ஒத்துழைப்பைத் துண்டிக்க அம்னோவின் நடவடிக்கை நேர்மையற்றது, நம்பமுடியாதது என்று முன்னாள் ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியன் கூறியுள்ளார்.

“என் கருத்துப்படி, அவர்கள் அதைதான் விரும்பினால், அவர்கள் நேர்மையற்று இருப்பதாக அர்த்தம், ” என்று பெர்சாத்து உறுப்பினருமான அவர் எப்எம்டியிடம் கூறினார்.

அம்னோ தொகுதித் தலைவர் சமர்ப்பித்த எந்தவொரு தீர்மானமானாலும், முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் உச்சமன்ற செயற்குழுவின் பொறுப்பில் உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

பெர்சாத்து உடன் உறவைத் துண்டிக்க அம்னோ விரும்பினால், இந்த நடவடிக்கை ஜோகூர் அரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம், ஏனெனில் மாநில அரசாங்கத்தை உருவாக்க அம்னோவுக்கு பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று ஒஸ்மான் கூறினார்.

முன்னதாக, பெர்சாத்துவுடனான ஒத்துழைப்பை நிராகரித்து, ஆரம்பத்தில் நாடு முழுவதும் உள்ள அம்னோ தொகுதித் தலைவர்களின் முடிவு ஒரு வாட்சாப் குழுவில் பதிவு செய்யப்பட்டது என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.