Home One Line P1 அனுவார் மூசா மீது அதிகாரப்பூர்வ புகார்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

அனுவார் மூசா மீது அதிகாரப்பூர்வ புகார்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

471
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா, கட்சி உறுப்பினர்களால் அதிகாரப்பூர்வ புகார்கள் ஏதேனும் இருந்தால், அம்னோ ஒழுக்காற்று வாரியத்தால் விசாரிக்கப்படுவார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறிய அறிக்கையைத் தொடர்ந்து, கட்சிக்கு சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்படலாம் என்று கட்சியின் ஒழுக்காற்று பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அம்னோ ஒழுக்காற்று பிரிவின் தலைவர் சுல்ஹாஸ்னன் ரபீக் கூறுகையில், அனுவார் மீது இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“எந்தவொரு அம்னோ உறுப்பினரிடமிருந்தும் அதிகாரப்பூர்வ புகார் வந்தால் மட்டுமே ஒழுங்கு பிரிவு விசாரணை நடத்த முடியும்,” என்று அவர் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஜனவரி 6- ஆம் தேதி, தேசிய முன்னணி பொதுச் செயலாளராக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அனுவார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அவருக்குப் பதிலாக அம்னோ பொதுச் செயலாளராக அகமட் மஸ்லான் நியமிக்கப்பட்டார்.

செய்தியாளர் கூட்டத்தில், கட்சியின் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியைத் தாக்குவது உட்பட கட்சியின் பிம்பத்தை கெடுப்பதாக அவர் கருதப்பட்டார்.

அவற்றில், அகமட் சாஹிட் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மற்றும் ஜசெகவுடனும் இணைந்து தேசிய கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்தார் என்பதை அவர் வெளிப்படுத்தினார்.

இந்த குற்றச்சாட்டை பின்னர் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் அம்னோ-ஜசெக ஒத்துழைப்பு இல்லை என்று கூறி மறுப்புத் தெரிவித்திருந்தார்.

அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர், புவாட் சர்காஷி மற்றும் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் நஜிப் ரசாக் போன்ற பல அம்னோ தலைவர்களும் கெதெரே நாடாளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கையை விமர்சித்தனர்.