கோலாலம்பூர்: அம்னோ தலைவர்கள் சம்பந்தமான பல நீதிமன்ற வழக்குகளைத் தொடர்வதால், அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கம் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக அகமட் மஸ்லான் அண்மையில் கூறியிருந்ததை கைரி ஜமாலுடின் சாடியுள்ளார்.
அம்னோவைப் பிரதிநிதிப்பது போல அறிக்கை வெளியிட வேண்டாம் என்று அவர் தற்போதைய அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லானை வலியுறுத்தினார்.
அகமட் மஸ்லானின் அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கைரி கூறினார்.
“இந்த பிரச்சனைக்கு கட்சி சார்பாக பேச வேண்டாம். நீங்களும் இன்னும் சிலரும் நீதித்துறை செயல்பாட்டில் நிர்வாகியின் தலையீட்டைக் காண விரும்புவதாகத் தோன்றுகிறது. எனவே நாமும் டோமி தோமஸ் மற்றும் லிம் குவான் எங் போன்றவர்கள்,” என்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து பெற்ற 2 மில்லியன் ரிங்கிட் பெற்றதை, உள்நாட்டு வருமானவரி வாரியத்திற்கு அறிவிக்கத் தவறிய குற்றச்சாட்டில் அகமட் மஸ்லான் தற்போது விசாரணையில் உள்ளார்.
ஜனவரி 4 அன்று, கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கைத் தொடர தேசிய கூட்டணி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக அம்னோ, அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அகமட் மஸ்லான் கூறியிருந்தார்.