Home One Line P1 சிங்கப்பூர் பிரதமர் முதல் கொவிட்-19 தடுப்பு மருத்தைப் பெற்றார்

சிங்கப்பூர் பிரதமர் முதல் கொவிட்-19 தடுப்பு மருத்தைப் பெற்றார்

491
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், வெள்ளிக்கிழமை கொவிட் -19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தைப் பெற்றார். 68 வயதான அவர் ஓர் உள்ளூர் மருத்துவமனையில் கையில் ஊசி போடப்பட்ட காணொலியை முகநூலில் பகிர்ந்துக் கொண்டார்.

சிங்கப்பூர் இதுவரை பிபைசர்-பயோஎன்டெக்கின் தடுப்பு மருந்துக்கு மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், அதன் 5.7 மில்லியன் மக்கள்தொகைக்கு போதுமான அளவுகளைப் பெற்றுள்ளதாகவும், மற்ற தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களான மாடர்னா மற்றும் சினோவாக் உள்ளிட்டவர்களிடமிருந்தும் தடுப்பு மருந்துகளைப் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது.

“சிங்கப்பூரர்கள் தடுப்பு மருந்தை பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புவதற்காக, நாங்கள் முதலில் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டோம்,” என்று லீ நாட்டின் உயர்மட்ட சுகாதார அதிகாரியான கென்னத் மாக் உடன் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டபோது கூறினார்.